business

img

ஒரே ஆண்டில் 62% உயர்ந்த சமையல் எண்ணெய் விலை.... 11 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு...

புதுதில்லி:
இந்தியாவில், அனைத்து விதமான பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 22 அத்தியாவசியப் பொருட்கள்விலைவாசி பல மடங்கு அதிகரித் துள்ளது.மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தரவுகள் படியே, உணவுப் பொருட்களில் - பருப்பு வகைகள், பழங்கள், முட்டைமற்றும் இறைச்சிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

மார்ச் மாதத்தைக் காட்டிலும், ஏப்ரல் மாதத்தில் பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 10.74 சதவிகிதம், பழங்கள் மீதான பணவீக்கம்27.43 சதவிகிதம், பாலின் மீதான பணவீக்க விகிதம் 2.04 சதவிகிதம், முட்டை-இறைச்சி-மீன் மீதான பணவீக்க விகிதம் 10.88 சதவிகிதம் என்று உயர்ந்தது.இதற்கிடையேதான் சமையல் எண்ணெய் விலையும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.வனஸ்பதி, சோயா, பாமாயில், சூரியகாந்தி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட அனைத்துவகையான எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு விலையைக் காட்டிலும், இந்தாண்டில் எண்ணெய் விலை 62.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்திய மக்கள் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தும் பாமாயிலின் சில்லறை விலை 2020 மே மாதம்88 ரூபாயாக இருந்தது, 2021 மே 24 அன்று ஒரு கிலோ 138 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 62.35 சதவிகித விலை உயர்வாகும்.இதேபோல், சூரியகாந்தி எண்ணெய் கிலோ 110 ரூபாய்க்கு விற்றது,தற்போது 59 சதவிகிதம் விலை உயர்ந்து 175 ரூபாயாகவும், வனஸ் பதி விலை 56 சதவிகிதம் அதிகரித்து கிலோ 190 ரூபாயாகவும், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சோயா எண்ணெய் விலை 55 சதவிகிதம் உயர்ந்து கிலோ 155 ஆகவும் உயர்ந்துள்ளது. 

நிலக்கடலை எண்ணெய் விலை கடந்தாண்டில் 133 ரூபாயாக இருந்தநிலையில், தற்போது அது 35.33 சதவிகிதம் விலை அதிகரித்து கிலோ180 ரூபாயாகவும், கடுகு எண்ணெய்விலை 48 சதவிகிதம் உயர்ந்து கிலோ175 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.இந்த விலைகள் உயர்வானது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச விலை அதிகரிப்பாகும்.கொரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றால் கோடிக்கணக் கானோர் வேலைவாய்ப்பை இழந்துதவிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருளான எண்ணெய்யின் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.இந்நிலையில், விலை உயர்வுக் கான காரணம் குறித்து, மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதான்சு பாண்டேபேட்டி ஒன்றை அளித்துள்ளார். 

அதில், ‘இந்தியாவின் தேவைக்கேற்ப எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லை. நமது நாட்டின் எண்ணெய் தேவையில், 60 சதவிகிதத்தை இறக்குமதி மூலமாகவே ஈடுகட்டுகிறோம். இறக்குமதியை நாம்அதிகம் சார்ந்து உள்ளோம். எனவே,சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும்போது இந்தியாவிலும் அதன் விலை உயரும் சூழல் ஏற்படுகிறது’ என்று வழக்கமான கதையைக் கூறியுள்ளார்.

;